“பொன்னியின் செல்வன்” படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பிடித்த கதாபாத்திரம் இதுவா.? அவரே கொடுத்த தகவல்.!

ponniyin-selvan
ponniyin-selvan

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலரும் வித்தியாசமான மற்றும் ஆக்சன் திரைப்படங்களை கொடுப்பது வழக்கம் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு நடித்து வருவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான்.. இவர் காமெடி கலந்த செண்டிமெண்ட், ஆக்சன் படங்களில் நடிக்கிறார்.

அந்த படங்களும் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறுகிறது. இதனால் அவரது மார்க்கெட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் காமெடி கலந்த படங்களாக இருந்தாலும் ஆக்ஷன், சென்டிமென்ட் போன்றவை இடம்பெறன.

அதனால்  அந்த படங்கள் இரண்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது இந்த படங்களை தொடர்ந்து சிவ கார்த்திகேயன் கையில் பிரின்ஸ், அயாலன், மாவீரன் போன்ற படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் இந்த ஒவ்வொரு படங்களுமே அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

அதில் முதலாவதாக நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்த்து உள்ளார். பின் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. கல்விக்கு மரியாதை சேர்க்கும் வகையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் மணிரத்தினம் அவர்களுக்கு நன்றி..

குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி சிம்மாசனத்தில் தன்னை கற்பனை செய்து கொள்ளும் காட்சிகள் மிகவும் அற்புதமாக இருந்தது படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனக் கூறி தெரிவித்திருக்கிறார் இந்த செய்தியை தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இவரை போலவே பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து பிரமித்து போன சினிமா பிரபலங்கள் பலரும் தனது வாழ்த்துக்களையும், கமெண்ட்களை கொடுத்தும் அசத்தி வருகின்றனர்.