தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் ஒரு படி தாண்டி உற்சாகமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாகியும் இவர் சினிமா உலகில் வெற்றி நடை போட்டு வருகிறார். மேலும் சினிமா உலகில் தற்போது அடுத்த படத்திலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் முதல்முறையாக கைகோர்த்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவருடன் பல முன்னணி நடிகர்கள் மற்றும் டாப் நடிகர் நடிகைகள் பலரும் நடிக்கின்றனர். அந்த வகையில் அந்த காலகட்டங்களில் ரஜினியுடன் ஆட்டம் போட்ட நடிகை குஷ்பூ மற்றும் மீனாவும் இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போன்றோரும் இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்தின் வரவேற்பு மிகப்பெரிய அளவில் எகிரி உள்ளது. அண்ணாத்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை குறி வைத்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த படத்தில் இருந்து சில அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளாராம் ஹீரோயினாக நயன்தாரா பின்னி பெடல் எடுத்து உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் இருந்து போட்டோக்களும் லீக்காகி வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் இவருக்கு என்ன பெயர் வைத்துள்ளனர் தெரியுமா.. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் “கணேசன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். தற்போது இந்த தகவல் சினிமா வட்டாரங்கள் சைட்டிலிருந்து வெளியாகி உள்ளது.