“அண்ணாத்த” திரைப்படத்தில் ரஜினியின் பெயர் இதுவா.? வித்தியாசமா இருக்கு..

RAJINI
RAJINI

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித்தை வைத்து நான்கு திரைப்படங்களை வெற்றிகரமாக கொடுத்தால் சினிமா உலகில் அசுர வளர்ச்சியை எட்டினார் சிறுத்தை சிவா.

தற்பொழுது ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து சாயலில் இருக்கும் என்பதால் பல வருடங்கள் கழித்து ரஜினியை இந்த படத்தில் பார்த்த ரசிகர்களும் ஆவலுடன் இருக்கின்றனர்.

வெகுவிரைவிலேயே அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படம் தீபாவளியை குறி வைத்து உள்ளது காரணம் மிகப்பெரிய ஒரு லாபத்தை நல்ல நாளில் ஈட்ட முடியும் என்பது அவர்கள் கருத்து.

மேலும் ரஜினிக்கு இன்றும் மிகப்பெரும் ஒரு கூட்டம் இருப்பதால் தற்பொழுது இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றியை ருசிக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது இந்த நிலையில் இந்த படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு பெயர் மன்னவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த பெயரையே படத்தின் டைட்டிலாக வைக்க படக்குழு அதிகம் ஆர்வம் காட்டியது இருப்பினும் கடைசியாக “அண்ணாத்த”  என்று பெயரை மாற்றி அமைத்தது.