தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் சங்கர் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக எந்திரன், நண்பன் போன்ற திரைப்படங்களில் பணியாற்றி பிரபலம் அடைந்தவர் தான் அட்லீ.
இவர் இயக்குனர் சங்கருக்கு உதவி இயக்குனராக பணியாற்றியதின் மூலம் பல வித்தைகளை தெரிந்து கொண்ட அட்லி பிறகு தானாக திரைப்படம் இயக்க தொடங்கினார். அந்த வகையில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா போன்ற பிரபலங்களை வைத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தினை இயக்கினார். இவ்வாறு இவருடைய முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்தது.
எனவே இவருடைய வெற்றினை அடுத்து நடிகர் விஜயின் தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று திரைப்படங்களையும் அடுத்தடுத்து இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். இதனை அடுத்து தொடர்ந்து இவர் விஜயை வைத்து திரைப்படத்தை இயக்கி வந்ததால் மற்ற நடிகர்கள் இவருடைய திரைப்படத்தில் நடிக்க மறுத்தனர். எனவே விஜய்யம் வேறொரு இயக்குனர் திரைப்படத்தின் நடிக்க வேண்டும் என்பதற்காக மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
அதன் பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் ஷாருக்கான் நயன்தாரா போன்றவர்களை வைத்து ஜவான் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். சமீப காலங்களாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த 14ஆம் ஆண்டு சீரியல் நடிகையும் குணச்சித்திர நடிகையுமான பிரியா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு பிரியா அட்லி இந்த தம்பதியினர்களுக்கு எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது பிரியா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
எனவே ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகள் கூறி நிலையில் சில தினங்களுக்கு முன்பு வளையாகப்பும் நடைபெற்றது அதில் நடிகர் ஏராளமான பிரபலங்கள் பங்கு பெற்று வாழ்த்துக்கள் கூறியிருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதல் பிள்ளை என்று தன் சகோதரரின் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனாய் என கலாய்த்து வருகிறார்கள்.