விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் சீரியல்கலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். இந்த தொடர் அண்ணன் தம்பி பாசம் மற்றும் கூட்டு குடும்பம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எடுத்து வரப்படுகிறது. மேலும் இந்த சீரியல் டிஆர்பி யிலும் சிறந்து விளங்குகிறது. இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் மக்களிடையே மிகவும் பரிச்சயமானவர்கள்.
இதில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா முதலில் குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் பாக்யராஜ் உடன் அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தவர் இருந்தாலும் வெள்ளித்திரையில் இவருக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் பிறகு சின்னத்திரையில் களம் இறங்கி சிறப்பாக வெற்றி நடை கண்டு வருகிறார்.
அதிலும் குறிப்பாக இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலமே மக்களிடையே பிரபலம் அடைந்தார். மேலும் இவர் தெலுங்கிலும் வத்தினம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நடிகை சுஜிதா சமூக வலைதளங்களில் பல புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் போன்றவற்றை தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.
தற்போது இவர் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதத்தில் புதிய கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் வயதான பாட்டி போல் வேடமிட்டு போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சுஜாதாவின் இந்த யதார்த்த நடிப்புக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த கெட்டப் புகைப்படம் தெலுங்கில் அவரது வத்தினம்மா சீரியலுக்காக போடப்பட்டதாம். மேலும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் தியாய் பரப்பி வருகின்றனர்.