தமிழ் சினிமாவில் ஆக்சன், பேய் படங்கள் மற்றும் காமெடி திரைப்படங்கள் தான் மக்கள் மத்தியில் சமிபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன அதை உடைத்தெறியும் வகையில் கிராமத்து சப்ஜெக்ட் உள்ள படங்களை கையில் எடுத்துக் வெற்றிக் கண்டு வருபவர் இயக்குனர் சிறுத்தை சிவா.
இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து 2 3 கிராமத்து படங்களை எடுத்து வெற்றி கொண்ட நிலையில் தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தையும் கிராமத்து கதையை பின்னணியில் எடுத்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ரஜினியும் இந்த திரைப்படத்தில் ஆர்வத்துடன் நடித்து வருகிறார்.
காரணம் இவரும் பல வருடங்களாக ஆக்சன் படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது கிராமத்து படம் என்பதால் சற்று சந்தோஷமாக நடித்து உள்ளதாக தகவல்கள் கசிகின்றன இந்தப் படம் இந்த வருடம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக அப்டேட்களை வெளியிட்டு இருக்கிறது. விரைவிலேயே படத்தின் டீசர் அல்லது டிரைலர் ஆகியவற்றை வெளியிட அதிரடியாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பாகவே ப்ரீ பூக்கிங்கில் அண்ணாத்த படம் வசூலை அள்ளி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. அண்ணாத்த படம் USA வில் மட்டும் ப்ரீ புக்கிங் மட்டும் இதுவரை 51 லட்சத்திற்கும் மேல் விற்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. மேலும் USAவில் மட்டும் அண்ணாத்த திரைப்படம் 300 திரையரங்குகளில் வெளியாக இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கேயே இப்படி என்றால் தமிழ்நாட்டில் சொல்வா வேண்டும் பெரும்பாலான திரையரங்குகளை அண்ணாத்த திரைப்படம் தான் கைப்பற்றி மேலும் ஒரு புதிய சாதனை இந்த திரைப்படம் படைக்குமென சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் கூறிவருகின்றனர்