சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி என்னுடைய ரியல் ஹீரோ இவர்தான்.? இவரே என்னை காப்பாற்ற கூடியவர் – பார்வதி நாயர் பளீர் பேட்டி.

parvathy-nair
parvathy-nair

தளபதி விஜய் காலத்திற்கு ஏற்றவாறு ஆக்சன் படங்களையே பெரிதும் கொடுத்து வருவதால் ரசிகர்கள் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். சண்டை காட்சிகளில் உள்ள படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும் அதிலும் தனது காமெடி மற்றும் காதல் ரொமான்டிக் என அதிலும் பின்னி பெடல் எடுப்பார்.

விஜயின் திரை படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் நல்ல வரவேற்பை பெறுகிறது இதனால் தளபதி விஜயை தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை குவித்து வருகிறார்.

இப்போது கூட பீஸ்ட் திரைப்படத்தில் மிக ஆர்வமாக நடித்துவருகிறார். இதை முடித்து விட்டு அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து ரெடியாக வைத்துள்ளார் இப்படி வெள்ளி திரையில் சிறப்பாக  ஓடிக் கொண்டிருப்பதால் மக்கள் ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்களையும் வெகுவாக தன்வசப்படுத்தி உள்ளார்.

அந்த வகையில் அஜீத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்று ஞான பார்வதி நாயர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். அஜித் படத்தின் மூலம் என்ட்ரி ஆகி இருந்தாலும் அவருக்கு பிடித்தது விஜய் அதனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் விஜய் ஒரு சூப்பர் ஹீரோ என கூறியிருந்தார்.

பார்வதி நாயர் அவ்வாறு கூற காரணம் அப்பொழுது ஒரு சிறப்பான கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும்போது உங்களை எந்த ஹீரோ வந்து காப்பாற்ற வேண்டும் என விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது அதற்கு உடனடியாக பதில் அளித்த பார்வதி நாயர் விஜய் சாரை நான் தேர்வு செய்வேன்.

ஒருவரை காப்பாற்ற வேண்டுமானால் அவர்தான் சரியான ஹீரோ அவர்தான் சூப்பர் ஹீரோ இமேஜ் உடையவர் என்றார் இவ்வாறு அவர் சொல்லியிருப்பது தளபதி ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.