தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சுமா மோகன் அவர்களை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர்களின் திருமண பத்திரிக்கை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான கௌதம் கார்த்திக்.
நம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனும் ஆவார். நடிகர் கார்த்திக் நடிகை ராகினியை முதல் திருமணம் செய்து கொண்டார் ராகினியின் மகன் தான் கௌதம் கார்த்திக். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதன் பிறகு தொடர்ந்து சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், தேவராட்டம் உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார். இவ்வாறு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை. இந்நிலையில் தற்பொழுது இவர் திருமணம் பற்றி கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைலாகி வருகிறது.
அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக்யிடம் ரசிகர் ஒருவர் திருமணம் எப்பொழுது என்று கேட்டிருக்கிறார் அதற்கு கௌதம் கார்த்திக் விரைவில் நடக்கும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் ரசிகர்கள் பொண்ணு ரெடி போல என கூறிவந்த நிலையில் இதற்கு முன்பு கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் கூறப்பட்டு வந்தது.
இவர்கள் இருவரும் தேவராட்டம் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள் எனவே இந்த படப்பிடிப்பின் பொழுது ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்துள்ளனர் இரண்டு வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் தங்களுடைய பெற்றோர்கள் சமுதாயத்துடன் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்ய இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ள நிலையில் வருகின்ற 28ஆம் தேதி இவர்களுடைய திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் தற்பொழுது இவர்களுடைய திருமண பத்திரிகை வெளியாகியிருக்கிறது. அந்த திருமண பத்திரிக்கை முழுக்க முழுக்க கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டு இருந்த திருமண அழைப்பு அழகிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.