பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் ஆபீஸ் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.
மேலும் இந்த சீரியல் ஆனது கனா காணும் காலங்கள் என்ற தொடரின் தொடர் நிகழ்ச்சியாக பார்க்க பட்டதன் காரணமாக இந்த தொடரின் மூலமாக பல்வேறு சின்னத்திரை நட்சத்திரங்கள் மிகவும் பிரபலம் ஆகி விட்டார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக கூட தற்போது செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் கார்த்திக் ஆபீஸ் கார்த்திக்கு என்னதான் அழைக்கப்படுவார்.
இதற்கு முக்கிய காரணம் அவர் இந்த சீரியலில் நடித்த பிரபலமானது தான். மேலும் தொடரில் லட்சுமி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை மதுமிலா இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பாக மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
அதன் பின்னர் ஆபீஸ் தொடரில் நடித்து அதன்பிறகு தாயுமானவன் அக்னி பறவை போன்ற பல்வேறு சீரியலில் நடித்து வந்த நமது நடிகை தன்னுடைய அழகான தோற்றத்தின் மூலமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டார். அந்த வகையில் விஷால் நடிப்பில் வெளியான பூஜை என்ற திரைப்படத்தில் கூட விஷாலுக்கு இவர் தங்கையாக நடித்து இருப்பார்.
இது தொடர்ந்தது ரோமியோ ஜூலியட் மாப்பிள்ளை சிங்கம் போன்ற பல்வேறு திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நமது நடிகை தன்னுடைய திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் முகம் காட்டவில்லை.
இவ்வாறு திருமணமான பிறகு நமது நடிகை பார்ப்பதற்கு கொஞ்சம் பப்ளிக்காக இருப்பது மட்டுமில்லாமல் தற்போது ஒரு மகளுக்கு தாய் ஆகியுள்ளார் இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நமது நடிகை தன்னுடைய கணவருடன் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.