lokesh kanagaraj : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து இந்திய அளவில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
முதலில் மாநகரம் என்னும் சிறிய பட்ஜெட் படத்தை எடுத்தார். அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய மூன்று படங்களும்..
நல்ல வரவேற்ப்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷ் தற்போது தளபதி விஜயை வைத்து லியோ என்னும் படத்தை எடுத்து வருகிறார். விஜய் உடன் இணைந்து பல டாப் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினி உடன் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் வாய்ப்பு கிடைத்தால் அஜித்துடன் இணைந்து பட பண்ணுவேன் என கூறினார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது கனவு திரைப்படம் குறித்து அவர் பேசி உள்ளார். மாநகரம் படத்தைத் தொடர்ந்து முன்னணி நடிகர் சூர்யாவை வைத்து நான் எடுக்க இருந்த திரைப்படம் தான் இரும்புக்கை மாயாவி. இந்தப் படம் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்பதால் இந்த படம் என்னுடைய கனவு படம் என கூறினார்.
ஆனால் இந்த படத்தை எடுக்க சில ஆண்டுகள் ஆகும் அதனால் தற்பொழுது வரை எடுக்காமல் இருக்கிறேன் ஆனால் நான் இந்த படத்தை எடுக்கும் பொழுது இது என்னுடைய கனவு படமாக இருக்கும் என கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.