தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாலா பொதுவாக பாலா தன்னுடைய திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை வச்சு செய்வார் என கூறி வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது சூர்யா மற்றும் பாலாக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா இடையில் தொடர்ந்து இவருடைய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் சூரறைப்போற்று திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றினை கண்டார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது.
அந்த வகையில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெய் பீம் இந்த படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்தது இருந்தாலும் ரசிகர்களின் பேராதரவையும் பெற்றது. இதனை அடுத்து வெளிவந்த எதற்கும் துணிந்தவன் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் பிறகு கமலஹாசன் கூட்டணியில் விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் கிளைமாக்ஸ்சில் ஐந்து நிமிடங்கள் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த படத்தில் இவருடைய கேரக்டர் பெருதளவிலும் பேசப்பட்டது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் உருவான திரைப்படம் வணங்கான் பாதியிலேயே நின்றுவிட்டது அதாவது சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக பாலா தெரிவித்திருந்தார்.
எனவே முதற்கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு திடீரென வணங்கான் திரைப்படம் நிறுத்தப்பட்டது இந்நிலையில் பல மாதங்களாக இந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த படப்பிடிப்பின் பொழுது பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவை பாலா ஒருமையில் அழைத்தாலும் சூர்யா படத்தின் தயாரிப்பாளராக இருந்தும் கதையை பாலா கூற மறுத்ததால்தான் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி உள்ளார் என கூறப்படுகிறது.