ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சுருதிஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை சுருதிஹாசன் தற்போது தன்னுடைய காதலருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நடிகை சுருதிஹாசன் நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் நடிகர் சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்திற்கு கதாநாயகியாக நடிக்க சுருதிஹாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஏழாம் அறிவு திரைப்படத்தில் சுருதிஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் சூர்யா சுருதிஹாசன் உடன் நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டாராம். அது மட்டுமல்லாமல் படபிடிப்பு இல்லாத நாட்களிலும் அவுட்டிங் சென்று இருக்கிறார்களாம்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சித்தார்த் நடிகை சுருதிஹாசனிடம் சண்டை போட்டு இருக்கிறார். வாய் சண்டையாக ஆரம்பித்த இந்த சண்டை போக போக கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு இருவருக்கும் செட் ஆகாது என்று கூறிவிட்டு பிரேக் அப் செய்து கொண்டார்களாம்.
சித்தார்த் மற்றும் சுருதிஹாசனின் காதலுக்கு நடிகர் சூர்யா தான் வில்லன் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து நடிகர் சித்தார்த் அவர்கள் தற்போது பாலிவுட் பட நடிகையாக வலம் வரும் அதிதி ராவ்வை காதலித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்லும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இதனை தொடர்ந்து நடிகை சுருதிஹாசன் அவர்கள் தன்னுடைய காதலருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் தனியாக வாழ்ந்து வருகிறாராம். இதனை தொடர்ந்து நடிகை சுருதிஹாசன் சமீபத்தில் தன்னுடைய காதலருடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.