சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் வெற்றி படங்களை கொடுக்கின்றனர் ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் தொடர் படங்களை கொடுத்து அசத்துவார்கள் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளவர்தான் லோகேஷ் கனகராஜ் இவர் முதலில் மாநகரம் என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் எடுத்த கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் அனைத்துமே..
நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. இந்த படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயுடன் மீண்டும் கூட்டணி அமைத்து லியோ திரைபபடத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. திரை உலகில் இப்படி ஓடும் இவர் இதுவரை எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது கிடையாது.
வங்கி வேலை பார்த்துவிட்டு அதன் பிறகு இவர் சினிமாவிற்கு வந்தார் என்று தான் பலருக்கும் தெரியும் ஆனால் உண்மை என்ன என்பதை மூத்த பத்திரிக்கையாளர் அந்த அந்தணன் சமீபத்திய வீடியோ ஒன்றில் கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது.. அதாவது விஜயகாந்தின் ராவுத்தர் ப்ரொடக்ஷனில் சௌந்தர் என்று ஒருவர் பணியாற்றி வந்தாராம் அவர் தான் விஜயகாந்துக்கு வரும் கதைகளை எல்லாம் கேட்பாராம் அவருக்கு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.
அதன்படி காமெடி நடிகர் மனோபாலாவுடன் இணைந்த ஒரு படத்தை தயாரித்து உள்ளார் ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.. அதன் பிறகு சௌந்தர் சினிமாவில் இருந்து விலகி விடலாம் என நினைத்தாராம் அந்த சமயத்தில் தான் சௌந்தர் தனது மகளுக்கு வரன் பார்த்து உள்ளார் அப்பொழுது வங்கியில் வேலை செய்து கொண்டிருந்த லோகேஷ் கனகராஜிக்கு தனது மகளை கொடுத்துள்ளார்.
சௌந்தர் மகளை கல்யாணம் செய்து கொண்ட பிறகு வேலையை விட்டுவிட்டு சினிமா முயற்சிகள் ஈடுபட்டார் லோகேஷ் அப்படித்தான் முதலில் “களம்” என்னும் குறும்படத்தை எடுத்து அசத்தினார் அது நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மாநகரம் படத்தின் கதையை எழுதி தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அவர்களிடம் கூறியுள்ளார். இப்படி தான் விஜயகாந்துக்கும் லோகேஷுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என கூறி உள்ளார்.