தமிழ் சினிமாவில் பலரின் ஃபேவரட் நட்சத்திர தம்பதியினர்களாக சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர்கள் பல வருடங்களாக இருந்து வருகிறார்கள். தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து பிரபலமடைந்த நடிகை குஷ்பூ தற்பொழுது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் காங்கிரஸ் கட்சி பிரமுகராக இருந்து வந்த இவர் தற்பொழுது பாஜகவில் இணைந்து செயலாற்றி வருகிறார்.
மேலும் கடைசியாக பல வருடங்கள் கழித்து ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். அதாவது ரஜினி, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர்களின் கூட்டணியில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் சுந்தர் சி மற்றும் குஷ்பூ இவர்களைப் போலவே ரசிகர்கள் மத்தியில் இவர்களுடைய மகள்களும் பிரபலமடைந்து உள்ளார்கள்.
முக்கியமாக இவர்கள் சிறு வயதில் இருந்தே அதிக உடல் எடையுடன் இருந்த நிலையில் தற்போது இருவருமே தங்களுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறி உள்ளார்கள் எனவே அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் இவர்களுடைய மாற்றத்தை பார்த்து வியந்து வருகிறார்கள்.
மேலும் தன்னுடைய மகள்களைப் போலவே குஷ்பும் தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி உள்ளார். தற்பொழுது உள்ள இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருந்து வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து குஷ்பூவும் தன்னுடைய அழகிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து தேவருடைய மகள்களும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் குஷ்பு கொஞ்சம் மேக்கப் செய்வதை போல அச்சு அசலாக மகள் அவந்திகா இருக்கிறார். இதனைப் பார்த்து ரசிகர்கள் இது குஷ்பூவா? இல்லை அவரது மகளா? என சந்தேகப்பட்டு வருகிறார்கள்.