தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்தான் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை முடித்தவுடன் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடைய பாணியில் மாஸ் கேங்ஸ்டார் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 67 திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாம் பகத்தில் விஜய் அவர்கள் நடிக்க இருக்கிறார் என்று தற்போது தகவல் ஒன்றை வெளியாகி உள்ளது. முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளனர் இதனால் துப்பாக்கி2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
துப்பாக்கி 2 படத்தில் வில்லனாக தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபுவை நடிக்க திட்டம் போட்டு உள்ளார் முருகதாஸ். துப்பாக்கி 2 படத்தில் வில்லனாக நடிக்க தயாராகி உள்ளதாக ஒப்புக்கொண்டாராம் நடிகர் மகேஷ்பாபு இதை முருகதாஸ் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.
துப்பாக்கி 2 படத்தில் ஹீரோ விஜய் மகேஷ்பாபு வில்லனாக நடிக்கிறார் இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதைவிட அடுத்ததாக விஜய் நடிக்க உள்ள தளபதி 67 திரைப்படத்திற்காக தான் மிகவும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
ஏனென்றால் விஜய் தளபதி 67 திரைப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தற்போது வம்சி படத்தை விட தளபதி 67 திரைப்படத்திற்காக தான் ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.
எதற்காக ரசிகர்கள் தளபதி 67 திரைப்படத்திற்காக காத்திருக்கிறார்கள் என்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது அதைவிட தளபதி 67 திரைப்படம் பிரம்மாண்ட ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.