நாயகன் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடித்தது இந்த பிரபல நடிகையா..? அட இது தெரியாம போச்சே..!

nayagan-1

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களை இயக்கி ரசிகர் மனதில் இடம்பிடித்தவர் தான் இயக்குனர் மணிரத்தினம் இவருடைய இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் வசூலிலும் பெருமளவு சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் இயக்குனர் மணிரத்னம் 1987ஆம் ஆண்டு நாயகன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கமலஹாசன் நாயகியாக சரண்யா இதர கதாபாத்திரத்தில் ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது மும்பையில் தாதாவாக வலம்வந்த வரதராஜ் முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அந்த வகையில் இத் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது மட்டுமில்லாமல் 3 தேசிய விருது பெற்று சாதனை படைத்தது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வினோதினி.இவர் நாயகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதுதான் பல்வேறு திரைப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு களைப் பெற்றார்.

இதனை தொடர்ந்து தற்போது தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வருவது மட்டும் இல்லாமல் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய வினோதினி  மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிக சிறந்த அனுபவமாக அமைந்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு நான் அவரை நேரில் கூட சந்தித்தது கிடையாது.

vinothini-1
vinothini-1

ஆனால் சுகாசினி மேடம் ஐ பார்த்தால் நான் நிறைய பேசியிருக்கிறேன் அதுமட்டுமில்லாமல் மணிரத்தினம் சாரைப் பார்த்தால் உங்கள் நாயகன் திரைப்படத்தில் நான் தான் நடித்தேன் என்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது. மேலும் நான் திரைஉலகில் 16 வயதிலேயே நாயகியாக நடிக்க ஆரம்பித்து விட்டேன் என்று கூறியுள்ளார்

vinothini-2

பின்னர் திருமணம் ஆன பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் போய்விட்டது ஆனால் ஒரு சில திரைப்படத்தில் மட்டும் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன்.  ஆனால் தற்போது எனக்கு சுமை கொஞ்சம் குறைந்தது மட்டுமில்லாமல் என் குழந்தைகளும் வளர்ந்துவிட்டார்கள் இனிமேல் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் எனக்கு ஆசையாக இருக்கிறது என்றும் கூறி உள்ளார்.