தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் பல திரைப்படங்களில் நடித்து பல சாதனைகளை படைத்ததனால் இவரை பலரும் சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் அதே அளவிற்கு பல தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி பல வெற்றி படங்களை கொடுத்து வந்த பிறகு சில வருடங்களாக வெறும் தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பார்த்ததை விட மிக மோசமாக தோல்வி அடைந்தது.
இதனை தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், கோலமாவு கோகிலா, ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினி. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று உள்ளது.
மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்தை யார் இயக்குவார் என்று பல கேள்விகள் எழுந்து இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அவர்கள் தான் ரஜினி வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார் என கூறப்பட்டது அதற்கான ஒன்லைன் கதையை கூட நடிகர் ரஜினி அவர்கள் கேட்டு ஓகே பண்ணி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் முழு கதை நடிகர் ரஜினிக்கு பிடிக்காததால் சிபி சக்கரவர்த்தியை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு ஜெயிலர் திரைப்படம் முடிந்ததும் அடுத்ததாக இயக்குனர் ஞானவேல் அவர்கள் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. ஜெயிலர் படம் வெளியான உடனே அடுத்த படத்தை யார் இயக்குகிறார்கள் என்ற செய்தி வெளிவரும் என்று கூறப்படுகிறது.