அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது இந்த பிரபலமா.. கமலுக்கு பிறகு இவர்தான் சரியான ஆளு..

biggboss ultimate
biggboss ultimate

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 4, 5 வருடங்களாக பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசனாக நடத்தப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி பலரையும் கவர்ந்து இழுத்து உள்ளதால் விஜய் டிவிக்கும் நல்ல டிஆர்பி பெற்று கொண்டு வருகிறது அதை விட்டு விடக்கூடாது என்பதற்காக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை முடித்துவிட்டு..

உடனடியாக  hotstar OTT தளத்தில்  பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது இந்த நிகழ்ச்சியை நாம் 24 மணி நேரமும் பார்த்து கண்டுகளிக்கலாம். மற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளவர் அனைத்து பேருமே திறமைக்கு பஞ்சம் இல்லாதவர்கள் அதனால் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் அல்டிமேட் பற்றி எரிந்து கொண்டுதான் இருந்தது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாரவாரம் எலிமினேஷன் நடந்து வருகிறது இதில் ஒரு சில பிரபலங்கள் வெளியேறி உள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் பிக்பாஸ் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி போன்றவற்றை உலகநாயகன் கமலஹாசன் தான் சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் தொகுத்து வழங்கி வந்தார் ஆனால் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன்.

விக்ரம் மற்றும் இந்தியன் 2 என அடுத்தடுத்த படங்கள் கையில் இருப்பதால் அதை முடித்துவிட்டு முனைப்பு காட்டி வருகிறார் அதன் காரணமாக கடந்த வாரத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வதாக கூறி உள்ளார் . மக்கள் யார் அடுத்த தொகுப்பாளராக இருப்பார் என மண்டையை பிய்த்துக் கொண்டு இருந்த நிலையில் தற்போது அதற்கான விடையையும் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் கொடுத்து உள்ளது.

பிரபல நடிகர் ஒருவர் உடை போட்டுக் கொண்டு திரும்பி நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நாளை அறிவிப்பேன் என நேற்றைய கூறிய நிலையில் இன்று அதற்கான பதில் கிடைத்து விடும் என ரசிகர்கள் நினைக்கின்றனர் இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அது சிம்பு தான் என அடித்துக் கூறி வருகிறார்.