அட இந்த பிரபலம் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்கிறாரா..? அப்செட்டில் ரசிகர்கள்

bigg-boss-06
bigg-boss-06

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து வாரம் வாரம் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் வெளியாகி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று எந்த போட்டியாளர் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறப் போகிறார் என்பது பற்றி அப்டேட் வெளியாகியிருக்கிறது.

அதாவது தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் துணையோடு பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது மேலும் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் மிகவும் ரகலையாக இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சண்டை சச்சரவுகள் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் போட்டியாளர்கள் கொஞ்சம் கூட மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை யோசிக்காமல் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு முட்டி மோதி வருகிறார்கள்.

எனவே இன்னும் சிலர் சுத்தமாக பேசாமல் அமைதியாக இருந்து வரும் நிலையில் அவர்களை மக்கள் கொக்கி போட்டு தூக்கி வருகிறார்கள் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் 50 நாட்களை கடந்துள்ள நிலையில் சாந்தி, அசல் கோளாறு, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், ஷெரினா மற்றும் ஜீ.பி முத்து ஆகியோர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

இந்த வார நாமினேஷனில் கதிரவன், ரட்சிதா, ஜனனி, மைனா, தனலட்சுமி, மற்றும் குயின்சி ஆகிய போட்டியாளர்கள் இடம்பெற்று உள்ளார்கள். மேலும் இந்த வாரம் டபுள் எக்ஷன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையில் இந்த வாரம் மிகவும் குறைவான வாக்குகளை மைனா மற்றும் குயின்சி பெற்றிருக்கிறார்கள்.

எனவே இவர்களில் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினால் கண்டிப்பாக மைனாவை விட குயின்சி தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இரண்டு எவிக்ஷன் என்றால் மைனா நந்தினி மற்றும் குயின்சி இருவருமே வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.