தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் சமீப காலமாக நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லைகா நிறுவனத்துடன் இணைந்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் பரவின.
மேலும் விக்னேஷ் சிவன் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் எல்லாம் வெளிவந்தன ஆனால் அவர் சொன்ன கதை அந்த அளவுக்கு திருப்திகரமாக இல்லாததால் தயாரிப்பு நிறுவனம் அவரை நீக்கியது இதனை எடுத்து மகிழ் திருமேனி சொன்ன கதை அஜித் மற்றும் லைகா நிறுவனத்திற்கு ரொம்ப பிடித்து போகவே அவரை இயக்குனராக நியமித்துள்ளது.
வெகுவிரைவிலேயே அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்து உடனே ஷூட்டிங் நடத்தப்படும் என கூறப்படுகிறது இதனால் இந்த வருடத்தின் கடைசி அல்லது அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே ஏகே 62 திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஏகே 62 திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையதள பக்கங்களில்உலா வருகின்றன.
அதன்படி ஏ கே 62 படத்தின் கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங் என்றும் வில்லனாக அருள்நிதி அல்லது அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும் ஒரு பேச்சுக்கு கிளம்பிய நிலையில் தற்போது ஏகே 62 படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதான் என ஒரு செய்தி பரவி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அதாவது ஏகே 62 திரைப்படத்தில் அஜித் முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாகவும், இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகவும் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் ரசிகர்களின் மனதை உரைய வைக்கும் அளவிற்கு இருக்கும் என சொல்லப்படுகிறது இதனால் ஏகே 62 படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. இது மட்டும் உண்மை என்றால் நிச்சயம் ஏகே 62 படம் ஹிட் அடிப்பது உறுதி எனவும் பலரும் கூறி வருகின்றனர்.