தென்னிந்திய சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கீதா இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமானார் மேலும் நடிகை கீதா 1978 ஆம் ஆண்டு பைரவி எனும் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ரீ கொடுத்தார்.
இதில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சகோதரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதைத் தொடர்ந்து நடிகை கீதா கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சிவகாசி, அழகன் ,சந்தோஷ் சுப்பிரமணியம், போன்ற பல திரைப்படங்களில் நடித்து ஒரு அம்மாவாக அனைவரது மனதிலும் நின்றார்.
இப்படி பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து பிரபலமான நடிகை கீதா தற்போது தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி வில்லன் நடிகரான நடிகர் பிரகாஷ்ராஜை அறிமுகம் செய்தது நடிகை கீதா தான் என்ற ஒரு தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் பிரகாஷ்ராஜ் மற்ற மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மிக நெருங்கிய நண்பராக பழகியவர் தான் நடிகை கீதா. அப்போது பிரகாஷ்ராஜின் நடிப்பை பார்த்த நடிகை கீதா இயக்குனர் கே பாலச்சந்தரிடம் அறிமுகம் செய்தார். அதன் பிறகு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த டூயட் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
அதனை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் சந்தோஷ் சுப்பிரமணியம், சிங்கம், வில்லு, வேங்கை, சகுனி, காதல் அழிவதில்லை, சிவகாசி, கில்லி, போக்கிரி, ஆதி, வாத்தியார், போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் அதேசமயம் பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து தற்போது முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
தற்போதைய தமிழ் சினிமாவில் நடிகர் பிரகாஷ்ராஜின் நடிப்புக்கு ஈடு கொடுக்க எவராலும் முடியாது அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பை வெளி காட்டிய பிரகாஷ்ராஜை முதன்முறையாக நடிகை கீதா தான் அறிமுகம் செய்தார் என்று தற்போது சமுக வலைதளத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.