ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட “சூப்பர் குயின்” நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இந்த நடிகையா.? உற்சாகத்தில் ரசிகர்கள்.

super queen
super queen

சின்னத்திரைக்கும் வெள்ளித்திரைக்கு எப்பொழுதும் ஒரு மறைமுகமான போட்டி நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது காரணம் அண்மைகாலமாக தொலைக்காட்சிகள்  சீரியல்களை விட ரியாலிட்டி ஷோக்களை அதிகம் நடத்துவதால் மக்கள் மன்றம் ரசிகர்கள் அதை அதிகம் பார்த்து கண்டு களிக்கின்றனர்.

இதனால் நாளுக்கு நாள் ரசிகர்கள் தொலைக்காட்சியை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இது ஒரு பக்கமிருக்க அண்மைகாலமாக நிறைய தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களை நடத்துகின்றன சொல்ல வேண்டுமென்றால் ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி தொடர்ந்து புதுபுது நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

இந்த இருவருக்கும் இடையே அவ்வப்போது  ஒரு சுகமான போட்டி நிலவி கொண்டுதான் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் குடும்ப இல்லத்தரசிகள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் பார்த்து கண்டுகளித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது அதிலிருந்து இப்பொழுது வரை நடைபெற்று வருகிறது இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் நகுல் மற்றும் நடிகை ராதா இந்த நிலையில் இந்த  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் ஆர்யா  போன்றவர்களும் கலந்து கொண்டனர் .

பின் எல்லா நடிகைகளும் தனது திறமையை வெளிப்படுத்தினார் கடைசியாக சூப்பர் குயின் படத்தை அள்ளிச் சென்றார் பார்வதி. புது புது அர்த்தங்கள் சீரியலில் நடிக்கும் பார்வதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை அள்ளி வீசி வருகின்றனர்.