நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் இவர் சமீப காலமாக நடித்த திரைப்படங்கள் வெற்றியும், தோல்வியுமாக இருந்து வந்துள்ளன இருப்பினும் தொடர்ந்து வெற்றிகொடுக்க சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து அவர் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த வகையில் தனுஷ் கையில் தற்பொழுது வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன இதில் முதலாவதாக வாத்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆக இருக்கிறது அதுவும் தமிழை தாண்டி தெலுங்கிலும் இந்த படம் கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்கும் பட்சத்தில் தனுஷ் தெலுங்கிலும்..
அதிக ரசிகர்களை உருவாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்தது சினிமா உலகில் சூப்பராக ஓடும் தனுஷ் நிஜ வாழ்க்கையில் சற்று மன நிம்மதி இல்லாமல் இருக்கிறார். 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் இருக்கின்றனர்.
இருவரும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த வந்த நிலையில் 18 வருடங்களுக்குப் பிறகு பிரிந்துள்ளனர். இவர்கள் பிரிவுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்திற்கு பிரபல நடிகை தான் காரணமான கிசுகிசுக்கப்படுகிறது. நடிகர் தனுஷை இப்பொழுது வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்த இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் தனுஷ் நடிக்க இருக்கிறார் அதற்கு சாய் பல்லவி தான் சிபாரிசு செய்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு இவரும் ஒரு காரணமாக இருப்பார் என தற்போது கிசுகிசுக்கப்படுகிறது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.