சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி இந்த படத்தை தனக்கே உரிய பாணியில் பி. வாசு இயக்கியிருந்தார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், திரில்லர் கலந்த படமாக உருவாகி இருந்தது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து நயன்தாரா, விஜயகுமார், ஜோதிகா, பிரபு, வடிவேல், நாசர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி இருந்தது. படம் ஒருவழியாக வெளியாகிய ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டு வந்தனர் இருப்பினும் பல வருடங்களாக எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்ததால் அவ்வளவு தான் என கூறினார் ஆனால் மீண்டும் இயக்குனர் வாசு.
இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினார் ஒருவழியாக கதை எழுதப்பட்டு இரண்டாவது பாகம் எடுக்க இருக்கிறது இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்து அசத்தியிருக்கிறார்.
இப்படி இருந்தாலும் ஹீரோயின் யார் என்பது தெரியாமலேயே இருந்து வந்தது ஒரு வழியாக அதற்கான பதிலும் கிடைத்துள்ளது நடிகை திரிஷா சந்திரமுகி 2 திரைப்படத்தில் நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.