நடிகை அதிதி ஷங்கரா இது.? நல்லா பப்ளிமாஸ் போல இருக்காரு.. இணையதளத்தில் வைரலாகும் பழைய புகைப்படம்.!

adithi-shankar

சினிமா உலகில் வாரிசு நடிகர் நடிகைகளின் வரவேற்பு அதிகரித்துள்ளது அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பை முடித்து இருந்தாலும் அவரது ஆசை சினிமா உலகில் நடிகையாக வேண்டும் என்பதுதான் அதனால் அவரது அப்பா ஷங்கரும் அந்த ஆசையை நிறைவேற்றி உள்ளார்.

அதிதி ஷங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமாகியுள்ளார் முதல் படமே இவருக்கு வெற்றி படமாக மாறியது மேலும் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவக்கார்த்திகேயனுடனும் ஒரு படம் பண்ண ஒப்பந்தமாகி இருக்கிறார்  அதிதி சங்கரின் மார்க்கெட் எடுத்த உடனேயே சரசரவென ஏறி உள்ளது. இதனால் அதிதி சங்கரும் சரி அவரது அப்பா இயக்குனர் சங்கரும் சரி ரொம்ப சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

அதிதி ஷங்கருக்கு சினிமாவில் ஒரு பக்கம் வாய்ப்புகள் கிடைக்க மறுப்பக்கம் ரசிகர்களை இன்னும் பெரிய அளவில் உருவாக்கிக் கொள்ள அவர் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார் இதனால் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அதிதி சங்கர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக அவர் ஒரு திருமண விழாவில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ணு போல இருந்த இவரா இப்பொழுது படத்தில் பின்னி பெடலெடுக்கிறார் எனக் கூறி புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்..

adithi shankar
adithi shankar