தளபதி 65 ஆவது திரைப்படத்தில் விஜய்க்கு எதிரியாக நடிக்கப்போவது இந்த நடிகரா.?அப்போ படம் வேற லெவல் தான் இணையதளத்தில் வெளியான அதிரடி தகவல்.?

vijay
vijay

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது மேலும் வெளிவந்த நாளிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

இதனையடுத்து தளபதி 65 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்கள் தான் இயக்கப் போகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு எப்பொழுதே சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு யார் வில்லன் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் சமீபகாலமாகவே கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தில் வில்லன் இவர்தான் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது அந்த தகவலில் இந்த திரைப்படத்தில் தளபதிக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கப் போகிறாராம்  அருண் விஜய் நடித்தால் அதிகம் சண்டை காட்சிகள் இடம் பெறும் என்பது பலருக்கும் தெரியும்.

மேலும் இந்த தகவல் தற்பொழுது விஜய் ரசிகர்கள் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vijay
vijay