தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய் இவருடைய படம் நன்றாக இல்லை என்றாலும் பரவாயில்லை வசூலில் பட்டையை கிளப்பி விடும் அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக ஒரு சாதனை படைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி படம் நல்லா இருக்கோ இல்லையோ வசூலில் ஹிட் தான் அந்த அளவிற்கு உயர்ந்திருந்த நடிகர் விஜய் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படமும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகியுள்ளது. வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஜில்லா மற்றும் வீரம் திரைப்படத்திற்கு பிறகு மறுபடியும் மோதிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் விஜய் தான் நம்பர் ஒன் அதனால் அவருக்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்து ரசிகர்களிடம் சண்டையை மூட்டி விடுவது போல் பேசி இருந்தார்.
இந்த நிலையில் விஜய் தான் நம்பர் ஒன் என்று தளபதி ரசிகர்களும் அஜித் தான் நம்பர் ஒன் என்று தல ரசிகர்களும் சமூக வலைதளத்தில் அடித்து கொள்ளாத ஒரு குறையாக சண்டையிட்டு வந்தனர் இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இதை தொடர்ந்து வாரிசு படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. வாரிசு படம் வெளியான இரண்டாவது நாளை கடந்து தற்போது மூன்றாவது நாளும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது அந்த வகையில் இரண்டாவது நாளான நேற்று வாரிசு படம் மொத்தம் 17 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.