ஒரு காலகட்டத்தில் விஜய் தொடர்ந்து காதல் கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் மின்சார கண்ணா.இந்த திரைப்படத்தில் விஜய், ரம்பா,குஷ்பூ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
மேலும் விஜய்க்கு ஜோடியாக மோனிகா காஸ்ட்லினோ நடித்திருந்தார் இவர் மும்பையைச் சேர்ந்தவர் ஆரம்பகால கட்டத்தில் ஹிந்தியில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு தமிழிலும் நடிப்பதை தொடங்கினார்.அந்த வகையில் 1999ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான காலியா என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோனிகா. இவர் நடித்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று தந்ததால் 2001ஆம் ஆண்டு காமசுந்தரி என்ற திரைப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு ஹிந்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் இவ்வாறு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவர் பெரிதாக பிரபலமடையவில்லை மேலும் இவரால் நீண்ட வருடங்கள் சினிமாவில் தாக்குப் பிடிக்கவில்லை இப்படிப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு இயக்குனர் சத்திய பிரகாஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் திருமணம் செய்து கொண்ட ஒரு ஆண்டிலேயே விவாகரத்து பெற்றார்கள்.
மேலும் இவருடைய கணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார் அதன் பிறகு இவர்கள் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இந்நிலையில் அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வந்தார் மேலும் விவாகரத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் மீண்டும் நடிப்பதை தொடர்ந்தார் இவ்வாறு திரைப்படங்கள் கை கொடுக்காத காரணத்தினால் பிறகு தொலைக்காட்சியில் சீரியல்களின் அடிப்பதை ஆரம்பித்தார்.
அந்த வகையில் 2009ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் வெளியான சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிப்பதை தொடர்ந்தார் அதன் பின்னர் கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட தொடர்ந்து சீரியல்களின் நடிப்பதை தற்போது வரையிலும் வழக்கமாக வைத்திருக்கிறார்.