வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் நடித்த நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா..! கண்கலங்க வைத்த மனைவி..!

vennila-kabadi-kuzhu-1

சினிமாவில் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் நடித்து இருந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் தான் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் அப்புகுட்டி பரோட்டா சூரி, விஜய் சேதுபதி சரண்யா மோகன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தவகையில் இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் என்றால் அது ஹரி வைரவன்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிறகு திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார் ஆனால் தற்போது பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் நமது நடிகர் பேட்டி ஒன்றில் பேசியது  பலரையும் வியக்க வைத்துள்ளது.

அந்த வகையில் நமது நடிகரின் மனைவி அவர்கள் கூறியது என்னவென்றால் என்னுடைய கணவர் வெண்ணிலா கபடிகுழு குள்ளநரி கூட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் எங்களுக்கு அரேன்ஜ் மேரேஜ்தான் நடந்தது எங்களுடைய வாழ்க்கையும் மிக சிறப்பாக சென்று கொண்டிருந்தது ஆனால் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது மட்டுமில்லாமல் பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டார்.

இதனால் என் கணவர் இறந்து போய் விட்டார் என பலரும் கூற ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் நான் நம்பிக்கையை கைவிடவில்லை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுத்து வந்தேன் இதனால் 15 நாட்கள் என்னுடைய கணவர் கோமாவிற்கு சென்றுவிட்டார் அப்பொழுதெல்லாம் நான் டிவியில் நடக்கும் நிகழ்ச்சி நடந்த நிகழ்ச்சியை போன்றவற்றைப் பற்றி அவரிடம் பேசிக் கொண்டே இருப்பேன்.

அந்த வேலையில் அவருக்கு உடல் எடை அதிகமானது மட்டுமில்லாமல் அவரை தன்னால் சமாளிக்க முடியவில்லை ஆகையால் மருத்துவர்களின் உதவியை கொண்டு அவரை கொஞ்சம் கொஞ்சமாக நடக்க வைக்க முயற்சி செய்தேன் மேலும் என்னுடைய கணவர் பிழைத்து வருவதற்கு எனக்கு உதவியாக இருந்தது பிளாக் பாண்டி அண்ணா கார்த்திக் அண்ணா சரவணா அண்ணா  ஆகியோர்கள் அவர்கள்.

vennila-kabadi-kuzhu-1
vennila-kabadi-kuzhu-1

இவர்கள் அனைவருமே என்னுடைய கணவரின் நண்பர்கள் அதுமட்டுமில்லாமல் தற்போது  என்னுடைய கணவரின் மருத்துவ செலவிற்கு 10 நாட்களுக்கு 8000 ரூபாய் ஆகிறது இதனால் தன்னுடைய சொந்த வீட்டை விற்றுவிட்டு தான் நான் மருத்துவ செலவை செய்து வருகிறேன். மேலும் தற்போது ஒரு பெட்டிக் கடை வைத்துள்ளேன் இதன் மூலம் வரும் வருமானத்தை குடும்ப செலவுக்கும் மருத்துவ செலவுக்கும் பார்த்து வருகிறேன்.

மேலும் இன்னும் 6 மாதம்  மருத்துவம் நீடித்தால் கண்டிப்பாக என் கணவர் குணமடைவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்னால் முடியும் என் கணவரை கண்டிப்பாக நான் மீட் எடுப்பேன் என கண்கலங்கியபடி ஹரி மனைவி கூறிய வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் இதைப் பார்த்து யாரேனும் உதவி செய்ய நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.