தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா இவர் ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்து இருந்தாலும் அதன் பின்னர் இவர் கவர்ச்சியில் கொடுத்த அலப்பறையை யாராலும் மறக்க முடியாது.
அந்த வகையில் இவர் பில்லா திரைப்படத்தில் கூட மிக மோசமாக நடித்தது மட்டுமல்லாமல் தளபதியின் அழகிய தமிழ் மகன் திரைப்படத்திலும் கவர்ச்சிக்கு பேர்போன நடிகையாக முத்திரை பதிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் நடிகை நமீதா அரசியலில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகின.
அதன்பிறகுதான் நமிதாவிற்கு சரிவுகள் தொடங்க ஆரம்பித்தது இந்நிலையில் அவர் அதிமுகவில் இணைவதில் ஜெயலலிதாவிற்கு சுத்தமாக விருப்பமே கிடையாதாம் பின்னர் ஒரு மேடை சந்திப்புக்கு பிறகு தான் அவருடைய சினிமா கேரியர் முற்றிலுமாக போய் விட்டது அதன் பிறகு தானே சொந்தமாக திரைப்படம் எடுத்தும் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில் திரைப்படத்தில் தான் நடிக்க வாய்ப்பு இல்லை என்பதுதான் காரணமாக தற்போது சீரியலில் நடிக்கலாம் என ஆர்வம்காட்டி வருகிறாராம். அந்த வகையில் சமீபத்தில் கூட பிரபல நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார். அந்த வகையில் தேவயானி நடித்த சீரியல் ஒன்றில் நமிதா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவரை வைத்து ஒரு பெரிய சீரியளை இயக்கலாம் என ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் கவர்ச்சியில் கதகளி ஆடிய நமது நடிகை சீரியலில் நடிக்கப்போகிறார் என பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.