நடிகை சரண்யா பொன்வண்ணன் கமலின் நாயகன் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் அதன் பின்னர் திரை உலகில் இவர் பெரிதும் குணச்சித்திர கதாபாத்திரம், நடிகர்களுக்கு அம்மா, சித்தி போன்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து ஓடிக்கொண்டு இருக்கிறார். இதனால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது.. வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொது தனுஷிடம் கோபமாக நடந்து கொண்ட சம்பவத்தை பகிர்ந்தார்.
விஐபி படத்தில் நடிக்கும் பொழுது இதெல்லாம் ஒரு ரோலான்னு என்னை ஏன் கூப்பிட்டிங்க என தனுஷ் இடம் சண்டை போட்டேன் அவர் இந்த படத்தின் கதையை என்னுடைய வீட்டிற்கு வந்து சொன்னார் அப்பொழுது இந்த படத்தில் உங்களுக்கு பெரிய ரோல் உண்டு, ஒரு பாடல் உண்டு என்றெல்லாம் சொன்னார்..
ஆனால் படப்பிடிப்பு நடந்த போது அந்த அளவிற்கு இல்லை என தோன்றியது ஆதலால் தனுஷிடம் என்னை இந்த படத்திற்கு கூப்பிடு இருக்கவே கூடாது என சண்டை போட்டேன் அதற்கு அவர் படம் முடிந்த பிறகு பாருங்கள் மேடம் என சொன்னார் படம் முடிந்து டப்பிங் பண்ணும் போது படத்தைப் பார்த்த ஆச்சரியப்பட்டு போனேன்..
எனக்கு அவ்வளவு காட்சி இருக்கிறதா இதெல்லாம் எப்பொழுது எடுத்தார்கள் என்று தோன்றியது ஆனால் படபிடிப்பில் இருந்த பொழுது இதெல்லாம் ஒரு படமா என்பது போல் தான் நடித்தேன் என கூறினார் மேலும் அவர் இந்த படத்தில் எனக்கு நடித்தது போலவே இல்லை அந்த படப்பிடிப்பு தளம் எவ்வளவு ஃப்ரீயாக இருந்திருந்தால் இதுபோன்று எனக்கு தோன்றி இருக்கும் கூறியிருந்தார்.