பட வாய்ப்பே எட்டிப் பார்க்க மாட்டேங்குது.. இந்த நேரத்துல இப்படி ஒரு முடிவா.. நடிகை அமலாபாலை பார்த்து சோகமான ரசிகர்கள்.!

amalapual
amalapual

திறமை இருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதுமே பட வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதேசமயம் சர்ச்சைகளிலும் சிக்காமல் இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை நம் கோட்டை விட்டாலே சினிமா உலகில் இருக்க முடியாது தற்போது அதை அனுபவித்து வருபவர் தான் நடிகை அமலா பால்.

இவர் ஆரம்பத்தில் நல்ல படங்களை கொடுத்து ஓடினார் மேலும் விஜய் விக்ரம் தனுஷ் ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடன் நடித்து வந்தார் இதனால் அவரது மார்க்கெட்டும் பெரிய அளவில் பேசப்பட்டது தொடர்ந்து வெற்றி நாயகியாக ஓடிவந்த இவர் அவ்வபொழுது சர்ச்சைகளிலும் சிக்கி கொள்வது வழக்கம் அந்த வகையில் சிந்து சமவெளி படத்திற்கு பிறகு அவர் நடித்த ஆடை படம்.

பெரிய சர்ச்சை படமாக மாறியது அதன் பிறகு நடிகை அமலா பாலுக்கு தமிழ் சினிமா உலகில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகின.. இருப்பினும் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து காத்துக் கொண்டிருந்தார் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவருக்கு கடாவர் மற்றும் அதோ அந்த பறவைகள் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதில் கடாவர் திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இதில் அமலாபால் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது அதனைத் தொடர்ந்து அதோ அந்த பறவை படத்தை பெரிய அளவில் அவர் எதிர்நோக்கி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அமலாபாலுக்கு தெலுங்கு பக்கமும் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அங்கு கமர்சியல் படங்கள் நிறையாக உருவாகின்றன.

அதில் ஹீரோயின்களை அதிகம் பாடல் மற்றும் காதல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விரும்புகிறேன் அது எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை என கூறியுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் இப்பதான் ஒன்னு ரெண்டு பட வாய்ப்பு எட்டி பாக்குது அதற்குள்ளேயே இப்படி ஒரு முடிவா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.