தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் மாபெரும் வெற்றி கண்டுள்ளார் இதைதொடர்ந்து சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு வெளியான இந்த திரைப்படம் ஆனது திரையரங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்த அதுமட்டுமில்லாமல் சிவாங்கி, பாலா, சரவணன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.
மேலும் அனிருத் இசையமைப்பில் உருவான இந்த திரைப்படமானது மே 13ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்பட்டது. இவ்வாறு திரையில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து பல வாரங்களாக ஹவுஸ்ஃபுல் தான். இந்நிலையில் தற்போது உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது.
இதனால் டான் திரைப்படத்தின் ஆட்டம் ஆனது இந்த வாரத்துடன் முடிவுக்கு வந்துவிடும் என தெரியவந்துள்ளது மேலும் சில நாட்களில் டான் திரைப்படம் தியேட்டரில் இருந்து எடுக்கப்படும் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. இதனால் தான் திரைப் பட குழுவினர்கள் தங்களுடைய திரைப்படத்தை அடுத்து இணையதளத்தில் வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த வகையில் ஜூன் 10ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் டான் திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளார்கள் மேலும் இரண்டே வாரத்தில் 100 கோடிக்கு மேல் வசூலித்த டான் திரைப்படத்தை தியேட்டர்களில் இருந்து தூக்க போவதை நினைத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள்.