தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலிக்கும் அஜித். தொடர்ந்து படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வெற்றி கண்டு வருகிறார். கடைசியாக இவர் நடித்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது தொடர்ந்து தனது 62வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.
இப்படி திரை சினிமாவில் ஓடும் இவர் பிரஸ் மீட், பொது நிகழ்ச்சி, விருது விழா, ரசிகர்களை சந்திப்பது, இசை வெளியீட்டு விழா என பலவற்றை தள்ளி வைத்து ஓடுகிறார். இருப்பின்னும் ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் அஜித்திக்கு தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர் அதனால் இப்பொழுதும் இவருடைய மார்க்கெட் கீழே இறங்காமல் இருக்கிறது.
இவரை போலவே 80 -களில் ஒரு நடிகர் இருந்துள்ளார் அவரை பற்றி பார்ப்போம்.. அஜித் அவையாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம் அந்த நடிகர் சுத்தமாக மீடியா, ப்ரோமோஷன் மற்றும் பொது நிகழ்ச்சி என எதிலேயுமே கலந்து கொள்ள மாட்டார். அதை பல வருடங்களாக அவர் பின்பற்றி வருகிறது தான் அதிசயம். அந்த உச்ச நட்சத்திர நடிகர் வேறு யாரும் அல்ல..
80, 90 கால கட்டங்களில் பல ஹிட் படங்களை கொடுத்து ஓடிய நவரச நாயகன் கார்த்தி தான்.. சினிமாவில் நல்லது கெட்டது அனைத்தையும் புறக்கணித்து வந்த கார்த்தி அதையும் தாண்டி தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகளை கூட அவர் பார்ப்பதோ பேசுவதோ கிடையாது மேலும் கார்த்தியை அவ்வளவு சீக்கிரம் பார்க்கவும் முடியாது பிடிக்கவும் முடியாது என சொல்லி வருகின்றனர் காரணம்..
அந்த அளவிற்கு அனைவரிடமிருந்து விலகி நவரச நாயகன் கார்த்தி இருக்கிறாராம் அஜித் இப்பொழுது எப்படியோ அதற்கு முன்பு நவரச நாயகன் கார்த்தி விளங்கியுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் இரண்டு பேருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா எனக் குறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.