தமிழில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்து தற்போது மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர் தான் விஜய் சேதுபதி இவர் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்தபோது இந்தத் திரைப்படத்திற்காக இவர் தேசிய விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த 2012ல் இவர் நடித்த மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் இவருக்கு அடுத்தடுத்து வெற்றியை கொடுத்துவிட்டது.
ஆம் இவர் நடித்த பீட்சா,நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்,சூது கவ்வும் போன்ற திரைப்படங்களில் மிகவும் அசத்தலாக நடித்ததால் இவருக்கு தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது அது மட்டுமல்லாமல் சூது கவ்வும் திரைப்படத்தில் மிகவும் அசத்தலாக மிரட்டியிருப்பார்.
பொதுவாகவே விஜய் சேதுபதி மற்ற நடிகர்களைப் போல் நான் கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என இல்லாமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிக்கும் திறன் உடையவர் விஜய் சேதுபதி அந்த வகையில் பார்த்தால் இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார் இவர் வில்லனாக நடித்த பேட்ட மற்றும் மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு தொடர்ந்து வெற்றியை தந்து விட்டது.
இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது வெற்றியின் ரகசியத்தை அவரே கூறியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது படத்தை ரசிகர்களின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் எப்படி இருந்தால் ரசிகர்களுக்கு பிடிக்குமோ அந்த அளவிற்கு தனது நடிப்பை மிகவும் தரமாக நடிக்க வேண்டும் என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பதற்கு முன்பே ஒர்க் அவுட் செய்து ரிகர்சல் பார்க்க வேண்டும் அதுதான் மிகவும் முக்கியமான விஷயம் என இயல்பாகவே அவர் கூறினாராம்.இதனைத்தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர்,லாபம்,கடைசி விவசாயி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.