அஜித் புகைப்படங்களை வெளியிடுவதற்கு பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருக்குதா.? செம்ம பிளான் பாஸ்..

ajith-

நடிகர் அஜித் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெட்ச் வினோத் உடன் கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் வலிமை படத்தை தயாரித்த போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்த நிலையில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்றன  இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சுவாரியர், சமுத்திரகனி, இளம் நடிகர் வீரா போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பின் பாதியில் அஜித்.

அவரது சொந்த விடுப்பு காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன இந்த நிலையில் இவர் இப்படி சுற்றுப் பயணம் சென்றுள்ளதால் படத்தின் படப்பிடிப்பு இடையே தடைபட்டு உள்ளதோ என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது அதன்படி அஜித் 52 நாட்கள் படப்பிடிப்பில் தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்துவிட்டு தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறாராம். மேலும் அடுத்து அவர் நடிக்க உள்ள காட்சிகளில் வேறொரு புதிய கேட்டபில் நடிக்க இருக்கிறாராம்.

ajith-
ajith-

அந்த கெட்டப் புகைப்படங்கள் வெளிவரக் கூடாது என்பதால் இப்போது இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது இந்த சுற்றுப்பயணத்தை முடித்து அவர் திரும்பி படத்தில் நடிக்க போகும் அந்த கெட்டப் புகைப்படம் ரிலீஸ் ஆகும் வரையும் வெளி வராது என கூறப்படுகிறது