விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பாகி வருகிறது.அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 17ஆம் தேதி அன்று மிகவும் கோலாகலமாக பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஷிவானி நாராயணன், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா,அறந்தாங்கி நிஷா,வேல்முருகன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ்,கேப்ரியலா,அனிதா சம்பத் சோம் சேகர்,ரேகா,ஆஜித்,சுசித்ரா உட்பட 18 போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தபடி ஆரி டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை பாலாஜி முருகதாஸ் பிடித்தார்.ஆரி 50 லட்சம் ரூபாயை பரிசாக வென்றார்.
இந்நிலையில் இந்த சீசனில் பிரபலமடைந்த போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா. இதன் மூலம் இவர் தற்பொழுது சில படங்களிலும் நடித்து வருகிறார். இவர் விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனா இவருடைய நெருங்கிய உறவு என்பது பலரும் அறியாத ஒன்று. இந்நிலையில் பாவனாவின் சகோதரி தான் சம்யுத்தா என்று பலர் கூறி வந்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியின்போது பாவனா சம்யுத்தாவிற்கு ஓட்டளிக்கும்மாறு டுவிட் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பாவனா ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார்.அப்போது ரசிகர் ஒருவர் சம்யுக்தா உங்கள் சகோதரியா என்று கேட்டதற்கு இல்லை இன்னொரு அம்மா மூலம் கிடைத்த சகோதரி என்று கூறியிருந்தார்.
அந்த வகையில் சம்யுத்தாவும் தொடர்ந்து ரசிகர்களுடன் வீடியோ காலில் நேரடியாக உரையாடி வருகிறார். அந்த வகையில் பாவனாவை பற்றி கேட்கும்பொழுது நாங்கள் சகோதரிகள் இல்லை அவர் என்னுடைய ஸ்கூல் சீனியர் மேலும் நாங்கள் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றும் மும்பையில் இருக்கும் பாவனாவின் உறவினர்கள் தற்பொழுது கொரோனா பிரச்சனையினால் எங்கள் வீட்டில்தான் தங்கி இருந்தார்கள். எனவே பாவனாவை எனக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.