யூடியூப் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி இளைஞர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் vj பார்வதி. இவர் தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதில் ஜெர் போட்டு உட்கார்ந்து இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவிற்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். பொதுவாக நடிகைகளாக இருந்தாலும்,தொகுப்பாளினியாக இருந்தாலும் சரி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டால் அவர்கள் கவர்ச்சி காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் vjபார்வதியும் தனது கவர்ச்சியான புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பிறகு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
ஆனால் vj பார்வதி இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக சில வாரங்கள் மட்டுமே பங்கு பெற்றார். அதே நிகழ்ச்சிகள் குக்காக பங்கு பேச்சு பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் அஸ்வின்.
அஸ்வின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இரட்டை வால் குருவி சீரியலில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஆதித்யா வர்மா திரைப்படத்தில் துருவுக்கு அண்ணனாக நடித்திருந்தார்.
இவர் இவ்வாறு சில படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து இருந்தாலும் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு இவரருக்கு வெற்றியை தரவில்லை.ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இவருக்கென்று ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் vj பார்வதி அஷ்வின்னுக்கும் இவருக்கும் இடையே உள்ள உறவை பற்றி தற்போது கூறியுள்ளார். அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பே அஸ்வினை வஜ் பார்வதிக்கு தெரியுமாம். விஜய் டிவி ஸ்டார் நிகழ்ச்சி ஆக்ஷனுக்கு இவர்கள் ஒன்றாக கலந்து கொண்டார்களாம். அந்த வகையில் 2014-லிருந்தே எனக்கும் அஸ்வினை தெரியும் என்று கூறியுள்ளார்.