முதல்வர் ஸ்டாலினுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இப்படி ஒரு உறவு முறையா.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்.

stalin-and-sivakarthikeyan
stalin-and-sivakarthikeyan

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து கொண்டதால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியான படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தார். சொல்லபோனால் சிவகார்த்திகேயன் பெரிதும் காமெடி காதல் கலந்த படங்களிலேயே பெரிதும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

அந்த படங்களும் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன் காரணமாகவே குறைந்த திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை தற்போது பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் அண்மையில் நடித்த டாக்டர் திரைப்படம் கூட 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது கூட தமிழை தாண்டி தெலுங்கிலும்  நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன இதனால் நாளுக்கு நாள் சிவகார்த்திகேயன் மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. தமிழ் சினிமா உலகில் ஹீரோயினாக மட்டும் தன்னை தக்க வைத்துக் கொள்ளாமல் படங்களை தயாரிப்பது பாடுவது நடிப்பது என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் இவருடைய குடும்பத்தினர் எந்த மாதிரியான வேலையை செய்தனர் எப்படி இவரது முன்னோர்கள் இருந்தனர் என்பது குறித்தும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயனின் பூர்விக  ஊர் திருவீழிமிழலை. அங்கு மிகப் பெரும் நாதஸ்வர கலைஞர்களான சுப்ரமணிய பிள்ளை மீனாட்சி சுந்தரம்பிள்ளை இவர்களின் கொள்ளு பேரன் தான் சிவகார்த்திகேயன் அதுமட்டுமல்லாமல் இவர்களின் தாத்தா கோவிந்தராஜ பிள்ளை தட்சிணாமூர்த்தி பிள்ளை ஆகியோர்கள் திருவீழிமிழலை சகோதரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

அதுபோன்று திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நெருங்கிய உறவினர்தான் கலைஞர் மு கருணாநிதி குடும்பத்தினர் அந்தவகையில் சிவகார்த்திகேயன் மற்றும் கலைஞர் குடும்பத்தினர் இந்த நாதஸ்வர கலைஞர்களின் வழிவந்தவர்கள் இதை வைத்து பார்க்கும்போது முதல்வர் குடும்பத்தினருக்கும் சிவகார்த்தியன் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவு முறை இருக்கிறது. அண்மையில் தனது சொந்த ஊருக்கு சென்ற சிவகார்த்திகேயன் நாதஸ்வர கலைஞர் வழி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.