“சந்திரமுகி 2” படத்தில் லட்சுமிமேனன் நடிக்க இப்படி ஒரு காரணம் இருக்கா.? மாஸ்டர் பிளான் போட்ட ராகவா லாரன்ஸ் .!

chandramugi
chandramugi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் சந்திரமுகி. இந்த படம்  திரையரங்கில் வெளிவந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது வசூல் ரீதியாகவும்  பட்டையை கிளப்பியது இந்த திரைப்படம் ரஜினி கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது மேலும் அதிக நாட்கள் ஓடி அசத்தியது சந்திரமுகி.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்களும் மக்களும் கேட்டுக் கொண்டனர் ஆனால் அப்பொழுது கைவிடப்பட்டு இருந்தது ஆனால் பல வருடங்கள் கழித்து தற்போது தூசி தட்டி சந்திரமுகி இரண்டாவது பாகத்தை எடுக்க ரெடியாகி உள்ளார் இயக்குனர் பி வாசு. இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக அவரது தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் ஓகே ஆனால் சந்திரமுகி ஜோதிகா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது இன்றுவரையிலும் தெரியாமல் இருந்து வருகிறது.  இது இப்படி இருக்க ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக முதலில் சாய் பல்லவியை அழைத்தனர் பிறகு திரிஷா என அடுத்தடுத்த நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் யாருமே இந்த படத்தில்  இணைவதற்கான அறிகுறியை காட்டவில்லை கடைசியாக இளம் நடிகை லட்சுமி மேனனை பட குழு உறுதி செய்தது இவரை இந்த படத்தில் நடிக்க வைக்க சில காரணங்களும் இருக்கிறது ராகவா லாரன்ஸ் இந்த படம் இல்லாமல் பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார் எல்லா ஷூட்டிங்கிலும் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

இது இப்படி இருக்க பெரிய நடிகைகளை சந்திரமுகி 2 படத்தில் போட்டால் அவர்கள் சொன்ன நேரத்திற்கு வரமாட்டார்கள் ஆனால் இளம் நடிகைகளை போட்டால் நாம் கூப்பிட்ட நேரத்திற்கு வருவார்கள் அந்த வகையில் லட்சுமி மேனனை இந்த படத்தில் நடிக்க வைக்க இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.