தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தளபதி விஜய் இவர் சமீபத்தில் பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் விஜய் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக போகும் தன்னுடைய 66வது திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள்தான் இயக்க உள்ளாராம் மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜயுடன் மகேஷ் பாபுவின் மகள் இணைந்து நடிக்க உள்ளதால் இதனை படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் தளபதிக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி மற்றும் இசை அமைப்பாளராக தமன் பணியாற்றுவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பற்றிய கதை இணையத்தில் வெளிவந்துள்ளது.
அதாவது இந்த திரைப்படத்தின் கதையை மிக சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தளபதி விஜயின் அத்திரைப்படத்தில் ஈரோட்டோமேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு இந்த நோயின் காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சனை மற்றும் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை ஆகும்.
இவ்வாறு திரைப்படம் உருவாக்குவதற்கு முன்பாகவே ரசிகர்களில் ஏக்கத்தை தூண்டும் வகையில் தயாரிப்பு நிறுவனமானது முன்கூட்டியே கதையின் நுணுக்கத்தை வெளியிட்டுள்ளார்கள்.