தமிழ் சினிமாவில் வித்யாசமான திரைப்படங்களை எடுத்து மக்களுக்கு விருந்து படைத்து வருபவர் மணிரத்னம். பழைய இயக்குனராக இருந்தாலும் காலம் முன்னேற முன்னேற தனது எண்ணங்களை மாற்றி இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அவர் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றியை மட்டுமே ருசித்து உள்ளன.
மேலும் இவரது இயக்கத்தில் நடிக்க தற்போது பல்வேறு நடிகர் நடிகைகள் ஏங்கி கொண்டிருக்கின்றன ஆனால் மணிரத்னம் கதைக்கு ஏற்றார் போல நடிகரை தேர்வு செய்வது வழக்கம் அந்த வகையில் வரலாற்று நாவலை வைத்து தற்போது மணிரத்னம் உருவாக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்தப் படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்து வருகிறார்.
இந்த கதையை இப்படத்தில் சொல்லிவிட முடியாது என்பதால் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார். முதலாவதாக மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி உள்ளனர்.
இந்த திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி ஒருவழியாக செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, பிரகாஷ்ராஜ் ஐஸ்வர்யா லஷ்மி, பிரபு, சரத்குமார், ஜெயராஜ், விக்ரம் பிரபு மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரத்துடன் இருக்கும் போஸ்டர்கள் சில இணைய தள பக்கத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.