பாலா திரைப்படத்தில் சூர்யாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா..? டைட்டிலை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

bala-1
bala-1

தமிழ் சினிமாவில் நந்தா பிதாமகன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் முன்னணி நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலா உடன் சூர்யா மூன்றாவது முறையாக இணைவது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தினை தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளாராம் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் சூர்யாவை 46வது திரைப்படமாகும்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது கன்னியாகுமரியில் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பில் பாலா மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தொடங்கப்படாத எனவும் டிராப் ஆகிவிட்டது எனவும் கூறப்பட்டது.

ஆனால் இப்படி வந்த தகவல்கள் அனைத்துமே பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மீண்டும் வாழ திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆசை என்ற வகையில் சில பதிவுகளை பதிவிட்டுள்ளார் இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் ஆரம்பிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

வேதம் என்ற திரைப்படம் குறித்து பல்வேறு பெயர்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகிய நிலையில் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் ஒரு மீனவனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால்தான் இந்த திரைப்படம் கடல் சார்ந்த பகுதியில் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான பெயர் பல இணையத்தில் வெளிவந்தாலும் இதில் கடலாடி என்ற பெயரை பாலா கன்பார்ம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது ஒருவேளை இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு கொடுத்த கதாபாத்திரம் இப்படி ஒரு கதாபாத்திரமாக இருக்குமா என பலரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.