விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா..! அடுத்த ராக்கெட் ராஜா ரெடி ஆகிட்டார்..!

karthik-1

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் கார்த்திக் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியன் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் வல்லவரையன் வாத்திய தேவன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இது தொடந்து பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் வெளியாகி  நல்ல வெற்றியை கொடுத்த கொம்பன்  திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வருகிறாராம்.  இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தினை சூர்யா மற்றும் ஜோதிகா தங்களுடைய 2டி என்டர்டைன்மென்ட்  சார்பில் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இவ்வாறு உருவாகும் இந்த திரை படத்தில் பிரகாஷ்ராஜ் ராஜ்கிரண் சூரி போன்ற பிரபலங்கள் நடிப்பதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் கூடிவிட்டது.

மேலும் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் இத் திரைப்படமானது தற்போது மதுரையில் முழுவீச்சாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடிகர் கார்த்திக் இந்த திரைப்படத்தில் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது  பற்றி தெரிந்துகொள்ள பலருக்கும் ஆசை இருக்கும்.

karthik-1
karthik-1

அந்தவகையில் இதைப்பற்றிய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் கார்த்திக் திரை படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஆனது மிக லோக்கலாக இருக்கிறது என்று சொல்ல முடியாது ஏனெனில் தர லோக்கலாக இருக்குமென கூறி உள்ளார்.