தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் பலரும் முன்னணி நடிகர்களாக ஒரு கட்டத்தில் உருமாறுகின்றனர்.அந்த இடத்தை தொட்ட பிறகு ஒரு கட்டத்தில் தமிழ்சினிமாவை அடுத்த லெவலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்துகின்றனர். அந்த வகையில் 70 – 80 காலகட்டங்களில் எம்ஜிஆர் – சிவாஜி ஆகியோர்கள் தமிழ் சினிமாவை தாங்கிப் பிடித்தனர்.
அவர்களை தொடர்ந்து ரஜினி – கமல் ஆகிய இருவரும் தாங்கிப் பிடித்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வருகின்றனர் மேலும் இப்போதும் தொடர்ந்து பல்வேறு படங்களில் இருவரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன்னுடன் கைகோர்த்து தனது 169 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
மறுபக்கம் கமல் லோகேஷ் கனகராஜ் கைகோர்த்து விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தனித்தனியாக நடித்தாலும் சினிமாவையும் தாண்டி இருவரும் எப்பொழுதும் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கின்றனர் நாம் அதை பல மேடைகளில் பார்க்க முடியும் இவர்கள் இருவரும் இணைந்து இன்னும் அதுவே நட்புடன் வலம் வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் கமலுடன் மிக நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் இயக்குனர் முரளி அப்பாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி மற்றும் கமல் குறித்து பேசி உள்ளார். நான் இளமை காலத்தில் இருந்த பொழுது ரஜினி ரசிகனாக இருந்தவன். கமல் படமா.. ரஜினி படமா.. என்றால் நான் முதலில் ரஜினி படத்தை தான் பார்ப்பேன் தற்போது கமல் தலைவராகி விட்டார்.
இருவரின் நட்பு பற்றியே முரளி அப்பாஸ் கூறியது : ரஜினிக்கு ஏதேனும் ஒன்று என்றால் கமல் துடித்துவிடுவார். அதே போல் தான் கமலுக்கு ஏதேனும் ஒன்று துடிதுடித்துப் போவார். இருவரும் நெருங்கிய நட்பு கொண்டவர்கள் என கூறி பேசினார்.