சின்னத்திரையில் பிரம்மாண்ட பொருட்செலவில் மக்களின் பேராதரவைப் பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் அந்த வகையில் தற்போது வரை பிக்பாஸ் ஐந்து சீசன்கள் வரை நிறைவடைந்து உள்ளது மேலும் இந்த ஐந்து சீசனையும் தொடர்ந்த கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். தற்போது புது புது டாஸ்குகளுடன் செம விறுவிறுப்பாக இந்த அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் லைவ் ஆக ஒளிபரப்பாகி வருகிறது இதனிடையே இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் சமீபத்தில் அவர் எனக்கு விக்ரம் படப்பிடிப்பு உள்ளதால் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
அதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் சென்ற வாரத்தில் இருந்து சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு வேறு சில காரணங்களுக்காகவும் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. அந்த வகையில் விக்ரம் படத்தில் கமல் நடித்து வரும் பாகங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு அடைந்ததாகவும்.
மேலும் ஒரு சில நாட்களுக்கு முன்பு அந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் விக்ரம் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து உள்ளது எனவும் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கமலஹாசன் விக்ரம் படத்தை காரணம் காண்பித்து வெளியேறியதை தவிர்த்து இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு மக்களின் போதுமான வரவேற்பு கிடைக்காததால் தான் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் எனவும் கூறப்படுகிறது