தமிழ் சினிமாவில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம்.இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கமலஹாசன் அவர்கள் நடித்திருப்பது மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி,சூர்யா போன்ற பல்வேறு பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சிறப்பித்துக் கொடுத்துள்ளார்கள்.
அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கான திரைகதையை மிகவும் சிறப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் படி அமைத்துக் கொடுத்துள்ளார்.இந்த தமிழ் சினிமாவுக்கு மிகவும் புது விதமாக இருப்பது மட்டுமில்லாமல் இவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜன் சினிமா உலகம் Lcu என்று ரசிகர்கள் அவரை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த வகையில் தான் அடுத்ததாக இயக்க போகும் அனைத்து திரைப்படங்களுமே லோகேஷ் கனகராஜ் சினிமா உலகத்தை சார்ந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்தும் இதே போன்ற சினிமா உலகத்தை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நமது இயக்குனர் சமீபத்தில் தான் ஆர்யாவை வைத்து சார்பாட்டா பரம்பரை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் இணையத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வெகுவாக கவர்ந்து விட்டது.அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை வைத்து ஒரு வெப் தொடர் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில் இதற்கான வேலைகள் மிக தீவிரமாக பா ரஞ்சித் இறங்கி உள்ளார் என்பது மட்டும் இல்லாமல் இந்த தொடரினை பா ரஞ்சித் இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர்கள் யாரேனும் இயக்குவார்களா என்பது தான் தெரியாமல் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இப்படிப்பட்ட தொடர் ஒன்று உருவானால் பா ரஞ்சித்துக்கும் ஒரு சினிமா உலகம் உருவாகும் என ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.