தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருந்து வருகிறார். இப்போ இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல்முறையாக கைகோர்த்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரித்து வருகிறார்.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாக்கி வந்தாலும் இந்த படத்தில் ஆக்சன், காமெடி, ரொமான்ஸ் போன்றவை இடம்பெறும் என தெரிய வருகிறது. இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.
இந்த படத்தில் விஜய் ஒரு கோடீஸ்வரராக நடிப்பதால் இந்த படத்தில் அவர் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் காஸ்ட்லியாகபயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக அவர் இந்த படத்தில் கையில் கட்டி உள்ள கடிகாரத்தின் மதிப்பு குறித்தும் தற்பொழுது தகவல் கிடைத்திருக்கிறது..
அதாவது அவர் கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தின் மதிப்பு சுமார் அதிகபட்ச விலை 90 லட்சம் என சொல்லப்படுகிறது.இது ரோஸ் கோல்ட் மற்றும் வைட் கோல்ட்டால் உருவாக்கப்படுவதாக சமூக வலைதள பக்கத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன மேலும் இந்த வாட்சை எல்லோரும் அவ்வளவு எளிதில் வாங்க முடியாதா? ஒரு சிலருக்கு இந்த வாட்சை வாங்க 10 வருடங்கள் கூட ஆகிவிடும் என கூறப்படுகிறது.
அந்த அளவிற்கு இந்த வாட்ச் ரொம்ப காஸ்ட்லியானது என சொல்லப்படுகிறது. இதுபோல விஜய் வாரிசு படத்தில் பயன்படுத்திய பெரும்பாலான பொருள்கள் காஸ்ட்லியான பொருட்கள் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது..