தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் அண்மைக்காலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெறுகின்றன. அதற்கு ஏற்றார் போல் இவரும் தனது சம்பளத்தையும் உயர்த்தி வருகிறார் தற்பொழுது இவர் ஒரு படத்துக்கு100 கோடி மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் விஜயின் சம்பளத்தை ஒரு பெரிய விஷயமாக நினைக்காமல் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு கமீட் செய்து வருகின்றனர் தற்போது கூட விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் படம் அடுத்த வருடம் பொங்களை முன்னிட்டு கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். வாரிசு படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படம் குறித்து ஒரு சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தில் ஒரு பணக்காரராக நடித்துள்ளார் அதனால் இவர் இந்த படத்தில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே காஸ்ட்லியான பொருட்கள் என கூறப்படுகிறது அதில் ஒன்றாக தளபதி விஜய் பயன்படுத்தும் வாட்ச் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது இவர் பயன்படுத்தும் வாட்ச் சுவிட்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பழைய வாட்ச் நிறுவனம்..
தான் இதை தயாரித்து இருக்கிறதாம் மேலும் இதன் மதிப்பு சுமார் 25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வாட்ச் ஸ்டெயின்லெஸ் டீலால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சின் உள்ளே தங்க மூலம் பூசப்பட்டு இருக்கிறது என சொல்லப்படுகிறது.