அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் தான் விடுதலை. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது முதல் பாகம் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ஏற்கனவே இந்த படத்தில் இருந்து டிரைலர், பர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவை வெளிவந்து..
படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. தொடர்ந்து விடுதலை திரைப்படம் குறித்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அண்மையில் கூட விடுதலை படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்ட பொழுது சந்தித்த இன்னல்கள் குறித்து படகுழுவினர் பேசியது பெரிய அளவில் வைரலானது குறிப்பாக நடிகர் சூரி சமீபத்தில் சொன்னது படப்பிடிப்பின் போது பல காட்சிகளில் அடிபட்டதாகவும்..
காடு பகுதிகளில் படமாக்கும் பொழுது அங்குள்ள பாம்புகள், பூச்சிகளின் தொல்லை இருந்ததாகவும் படம் ரொம்ப மெனக்கெட்டு எடுத்துள்ளதாகவும் தனது அனுபவங்களை பகிர்ந்தார்.இந்த நிலையில் விடுதலை படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது 1992 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு தான்..
இந்த திரைப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது அதாவது தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கிய வாச்சாத்தி கலவரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் விடுதலை படம் உருவாகி இருக்கிறது என சொல்லப்படுகிறது 1992 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பழங் குழுவினர் வசிக்கும் வாச்சாத்தி என்ற கிராமத்தில் சந்தன கட்டையை பதிக்க வைத்துள்ளதாக காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர்..
சோதனை நடத்தினார் அப்பொழுது கிராம உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது இளைஞர்களை துன்புறுத்தினார் இந்த பிரச்சனையை தான் தற்பொழுது விடுதலை படமாக உருவாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..